No results found

    சர்வதேச, தேசிய போட்டிகளில் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு விருது: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

    சர்வதேச, தேசிய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு விருது வழங்கும் விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, 2019-2021 ஆண்டுகளில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். விழாவில் 1,130 விளையாட்டு வீரர்களுக்கு காசோலைகள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:- தமிழகத்தில் விளையாட்டு துறை வேகமாக செயல்பட்டு வருகிறது. சிலம்பம், கபடி போட்டிகளுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி முடிந்த நிலையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி, சென்னையில் இன்று தொடங்குகிறது. முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவு இன்று துவங்குகிறது. பிப்ரவரி மாதம் வரை பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன இவ்வாறு அவர் பேசினார்.
    Previous Next

    نموذج الاتصال