இந்தியாவில் ஜப்பான் நிறுவனமான சுசூகி, வாகன தயாரிப்பில் 40 ஆண்டு கால நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சி குஜராத் மாநிலம், காந்திநகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, அரியானாவில் மாருதி சுசுகி வாகன உற்பத்தி நிலையம் மற்றும் குஜராத்தில் சுசுகி நிறுவன பேட்டரி ஆலைக்கும் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது:- கடந்த எட்டு ஆண்டுகளில், இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவுகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன. இந்தியா-ஜப்பான் இடையேயான கூட்டாண்மையின் வலுவை மாருதி-சுசுகியின் வெற்றி எடுத்துக் காட்டுகிறது. எங்களின் முயற்சிகள் ஜப்பானுக்கு எப்போதும் மரியாதையும் அளித்தன. அதனால்தான் சுமார் 125 ஜப்பானிய நிறுவனங்கள் குஜராத்தில் செயல்படுகின்றன.
மின்சார வாகனங்களின் சிறப்பான அம்சங்களில் ஒன்று அவை சத்தம் இல்லாமல் அமைதியாக இயங்குவதுதான். 2 சக்கர வண்டிகளோ, 4 சக்கர வண்டிகளோ எதுவாக இருந்தாலும் மின்சார வாகனங்கள் சத்தம் போடுவதில்லை. இந்த மவுனம் நாட்டில் ஒரு மவுனப் புரட்சியின் தொடக்கமும் கூட. இந்தியாவில் தற்போது மின்சார வாகன சந்தை விரைவான வேகத்தில் வளர்ந்து வருகிறது, இது கற்பனை செய்து பார்க்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தும் அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு வருமான வரியில் தள்ளுபடிகள் மற்றும் எளிமையான கடன் செயல்முறை போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் உள்கட்டமைப்பைத் தயாரிக்க நிறைய கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன விநியோகம், தேவை மற்றும் சுற்றுச்சூழலை வலுப்படுத்துவதன் மூலம், மின்சார வாகன உற்பத்தி துறை முன்னேற்றம் காணப் போவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.