அதிகாரம் 1
1 கிறிஸ்து இயேசுவுக்குள் பிலிப்பி நகரில் வாழ்கின்ற இறைமக்கள், மேற்பார்வையாளர்,
திருப்பணியாளர் அனைவருக்கும், கிறிஸ்து இயேசுவின் ஊழியர்களான சின்னப்பனும்
தீமோத்தேயுவும் எழுதுவது:
2 நம் தந்தையாகிய கடவுளிடமிருந்தும், அண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும்
உங்களுக்கு அருளும் சமாதானமும் உண்டாகுக!
3 செபத்தில் உங்களைக் குறிப்பிடும்போதெல்லாம் என் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.
4 உங்கள் அனைவருக்காகவும் நான் மன்றாடும் பொழுதெல்லாம் தொடக்கத்திலிருந்தே இன்றுவரை
5 நீங்கள் நற்செய்தித் திருப்பணியில் பங்கேற்று வருவதை நினைத்து, மகிழ்ச்சியுடன்
மன்றாடுகிறேன்.
6 உங்களில் சிறந்ததொரு வேலையைத் தொடங்கியவர், இயேசு கிறிஸ்துவின் நாள்வரை அதைத்
தொடர்ந்து செய்து நிறைவுபெறச் செய்வார் என நான் நம்பியிருக்கிறேன்.
7 உங்கள் எல்லோரையும் பற்றி எனக்கு இத்தகைய உணர்ச்சிகள் எழுவது இயற்கைதானே!
ஏனெனில், நான் சிறையில் இருந்தபொழுதும், நான் நற்செய்திக்காகப் போராடி அதை
நிலைநாட்டிய பொழுதும், என்னுடனிருந்து எனக்குக் கிடைத்த வரத்தில் பங்குகொண்ட
நீங்கள் என் இதயத்தில் இடம் பெற்றுவிட்டீர்கள்.
8 கிறிஸ்து இயேசுவுக்குரிய அதே பரிவுள்ளத்தோடு உங்கள் எல்லோர் மீதும் எவ்வளவோ
ஏக்கமாயிருக்கிறேன். இதற்குக் கடவுளே சாட்சி.
9 எனவே மேலானவற்றையே பகுத்தறியச் செய்யும் அறிவையும் உள்ளுணர்வு அனைத்தையும்
உங்களுக்குத் தர வேண்டும் என்பதே என் செபம்.
10 இவ்வாறு இயேசு கிறிஸ்துவின் வழியாய் நாம் பெறும் ஏற்புடைய வாழ்வின் பயனால்
நிரப்பப்பட்டு,
11 கிறிஸ்துவின் நாளை எதிர்நோக்கி, கடவுளின் மகிமைக்காவும் புகழுக்காவும் நீங்கள்
குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழ்ந்து வருவீர்கள்.
12 சகோதரர்களே, எனக்கு நேர்ந்தவையெல்லாம் நற்செய்தியின் வளர்ச்சிக்குப் பயன்படுபவை
ஆயின.
13 இதை நீங்கள் அறிய வேண்டும் என விரும்புகிறேன். கிறிஸ்துவுக்காக நான்
சிறைப்பட்டது அரண்மனைக் காவற்படையினர் அனைவருக்கும் மற்ற யாவருக்குமே நன்கு
தெரியவந்தது.
14 ஆகவே, சகோதரர்களுள் மிகப் பலர் என் சிறை வாழ்வினால் ஆண்டவருக்குள் உறுதிகொண்டு
கடவுளின் வார்த்தையை அச்சமின்றி அறிவிக்க மேலும் துணிவு கொண்டிருக்கின்றனர்.
15 இவர்களுன் சிலர் பொறாமையாலும் போட்டி மனப்பான்மையாலும் கிறிஸ்துவை
அறிவிக்கின்றனர்@ வேறு சிலரோ நல்ல மனத்தோடு அறிவிக்கின்றனர்.
16 இவர்களைத் தூண்டுவது அன்பே. நற்செய்திக்காகப் போராடவே நான்
குறிக்கப்பட்டிருக்கிறேன் என இவர்கள் அறிவார்கள்.
17 மற்றவர்களோ கட்சி மனப்பான்மையால் கிறிஸ்துவை அறிவிக்கின்றனர். அவர்களுடைய
நோக்கம் நேர்மையானதன்று. என் சிறை வாழ்வின் வேதனையை இன்னும் மிகுதியாக்க
நினைக்கின்றனர்.
18 அதனாலென்ன ? அவர்களுடைய நோக்கம். வஞ்சகமானதோ, நேர்மையானதோ@ எப்படியும் கிறிஸ்து
அறிவிக்கப்படுகின்றார். அது எனக்கு மகிழ்ச்சியே ஆம், இனியும் மகிழ்ச்சியாகவே
இருக்கும்.
19 உங்கள் மன்றாட்டினாலும் இயேசு கிறிஸ்துவினுடைய ஆவியின் துணையாலும் இதெல்லாம்
எனக்கு மீட்பளிப்பதாய் முடியும் என்று நான் அறிவேன்.
20 என்ன நேரிடினும் நான் நிலைகுலைய மாட்டேன். ~இது வரையில் என்னால் கிறிஸ்துவின்
புகழ் விளங்கியதுபோல் இப்பொழுதும் நான் இருந்தாலும் இறந்தாலும் என்னால் அவரது புகழ்
விளங்கும். இதுவே என் பேராவல். இதுவே என் நம்பிக்கை
21 ஏனெனில், எனக்கு வாழ்வதென்பது கிறிஸ்துவே@ சாவது ஆதாயமே.
22 ஆனால், உலகில் வாழ்ந்தால், பயனுள்ள பணிசெய்யக் கூடுமாயின் எதைத் தேர்ந்து
கொள்வதென்பது எனக்குத் தெரியவில்லை.
23 இரு பக்கங்களிலும் நெருக்கப்படுகிறேன். உயிர் நீத்து கிறிஸ்துவோடு
இருக்கவேண்டும் என்னும் ஆவல் ஒருபுறம். ~இதுவே மிகச் சிறந்தது,
24 மற்றொருபுறம், இன்னும் உலகில் வாழ்வது உங்கள் பொருட்டுத் தேவையாயிருக்கிறது.
25 இந்த உறுதியில் நான் ஒன்று அறிவேன்: நான் இன்னும் உயிரோடிருந்து நீங்கள்
விசுவாசத்தில் வளர்ச்சிபெற்று மகிழ்ச்சி காணும்படி உங்கள் அனைவரோடும்
தங்கியிருப்பேன்.
26 ஆகவே, நான் உங்களிடம் திரும்பி வருவதால், கிறிஸ்து இயேசுவுக்குள் நீங்கள்
கொள்ளும் பெருமிதம் என் பொருட்டு மிகுதியாகும்.
27 ஆனால், கிறிஸ்துவின் நற்செய்திக்கு ஏற்ற வாழ்க்கை நடத்துங்கள்: நான் உங்களை
வந்து பார்த்தாலும், வரமுடியாமல் உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டாலும் நீங்கள்
நற்செய்தியின் மேலுள்ள விசுவாசத்திற்கே ஒரே உள்ளத்தோடு போராடி, ஒரே மனதாய் நிலைத்து
நிற்கிறீர்கள் என்பதும்.
28 எதிரிகள் முன் சிறிதும் மிரளாமல் இருக்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரிய
வேண்டும். இவ்வாறு நீங்கள் மிரளாமல் இருப்பது அவர்களுடைய அழிவுக்கும் உங்களுடைய
மீட்புக்கும் அறிகுறியாகும். இது கடவுளின் செயல்.
29 நீங்கள் கிறிஸ்துவில் விசுவாசம்கொள்வதற்கு மட்டுமன்று. அவருக்காகத் துன்பங்களை
ஏற்பதற்கும் இறையருள் உங்களுக்கு அளிக்கப்பட்டது.
30 எனக்குள்ள போராட்டமே உங்களுக்கும் உண்டு. எனக்கிருந்த போராட்டத்தை நீங்கள் அன்று
கண்டீர்கள். இன்னும் நான் அதில் ஈடுபட்டிருப்பது உங்கள் செவிக்கு எட்டியுள்ளது.