அதிகாரம் 1
1 பென்யமீன் நாட்டில் அநாத்தோத்து என்னும் ஊரில் இருந்த அர்ச்சகர்களுள் ஒருவராகிய
எல்சியாஸ் என்பவரின் மகனான எரெமியாசின் வார்த்தைகள்.
2 யூதாவின் அரசனும் அமோனின் மகனுமான யோசியாசின் நாட்களில், அவனது அரசாட்சியின்
பதின்மூன்றாம் ஆண்டில் ஆண்டவரின் வாக்கு அவருக்கு அருளப்பட்டது@
3 யூதாவின் அரசனும், யோசியாசின் மகனுமாகிய யோவாக்கீன் நாட்களிலும் அது அருளப்பட்டது,
யூதாவின் அரசனும் யோசியாசின் மகனுமான செதேயாசின் பதினோராம் ஆட்சியாண்டின்
முடிவுரையிலும் யெருசலேம் நகரத்தார் அடிமைகளாகக் சொண்டு போகப்பட்ட ஐந்தாம் மாதம்
வரையில் ஆண்டவருடைய வாக்கு அவருக்கு அருளப்பட்டது.
4 ஆண்டவருடைய வாக்கு எனக்கு அருளப்பட்டது.
5 உன் தாய் வயிற்றில் உன்னை உருவாக்கு முன்பே நாம் உன்னை அறிந்திருந்தோம்@
கருப்பையினின்று நீ வெளிப்படு முன்பே உன்னை நாம் அர்ச்சித்திருக்கிறோம்@
மக்களினங்களுக்கு இறைவாக்கினாராக ஏற்படுத்தினோம்."
6 நான்: "ஐயோ, ஆண்டவராகிய இறைவா, எனக்குப் பேசத் தெரியாது@ நான் சிறுபிள்ளை!"
என்றேன்.
7 ஆனால் ஆண்டவர் சொன்னார்: "நான் சிறுபிள்ளை~ என்று சொல்லாதே. ஏனெனில் நாம் யாரிடம்
உன்னை அனுப்புகிறோமோ அவர்களிடம் நீ செல்வாய்@ நாம் எதைச் சொல்லக் கற்பிக்கிறோமோ அதை
நீ அறிவிப்பாய்@
8 நீ அவர்கள் முன் அஞ்சாதே@ நாம் உன்னோடு இருக்கிறோம்@ உன்னை அவர்களிடமிருந்து
விடுவிப்போம் என்கிறார் ஆண்டவர்."
9 ஆண்டவர் தமது கையை நீட்டி என் வாயைத் தொட்டு, "இதோ நம் வார்த்தைகளை உனது வாயில்
ஊட்டினோம்@
10 பிடுங்கிப் பறிக்கவும், இடித்துத் தகர்க்கவும், அழித்து ஒழிக்கவும், கவிழ்த்து
வீழ்த்தவும், கட்டி உயர்த்தவும், நட்டு வைக்கவும் மக்களினங்கள் மேலும் அரசுகள்
மேலும் இதோ உன்னை ஏற்படுத்தியிருக்கிறோம்" என்றார்.
11 ஆண்டவருடைய வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது: "எரெமியா, என்ன காண்கிறாய்?"
என, நான், "விழிப்பாயிருக்கும் மரக்கிளையைக் காண்கிறேன்" என்றேன்.
12 அதற்கு ஆண்டவர்: "நீ கண்டது சரியே@ அவ்வாறே நமது வார்த்தை நிறைவேறும்படி நாமும்
விழிப்பாயிருப்போம்" என்று சொன்னார்.
13 ஆண்டவரின் வாக்கு இரண்டாம் முறை எனக்கு அருளப்பட்டது: "நீ காண்பது என்ன?" என்று
கேட்டார். "பொங்கிக் கொதிவரும் பானை@ அது வடக்கிலிருந்து வருகிறது" என்று சொன்னேன்.
அதற்கு ஆண்டவர் சொன்னார்:
14 வடக்கிலிருந்தே இந்நாட்டு மக்கள் அனைவர் மேலும் தீங்கு பொங்கிப் பாயும்.
15 இதோ வடக்கிலுள்ள எல்லா அரசுகளின் மக்களையும் அழைத்து வரப்போகிறோம், என்கிறார்
ஆண்டவர்@ அந்த அரசர்கள் அனைவரும் வந்து ஒவ்வொருவனும் யெருசலேம் நகர வாயில்களின்
முன்பும், அதன் மதிற் சுவர்களைச் சுற்றிலும், யூதாவின் நகரங்கள் அனைத்தின்
எதிரிலும், தத்தம் அரியணையை அமைத்துக் கொள்வார்கள்.
16 அப்பொழுது, நம்மை விட்டகன்று அந்நிய தெய்வங்களுக்குத் தூபங் காட்டி தங்கள்
கைவேலைப்பாடான சிலைகளை வழிப்பட்டவர்களுக்கு எதிராக, அவர்களுடைய
அக்கிரமங்களுக்கெல்லாம் தீர்ப்புக் கூறப் போகிறோம்.
17 நீயோ உன் இடையை வரிந்து கட்டிக்கொள்@ எழுந்து போய் நாம் உனக்காகக் கட்டளையிடும்
எல்லாவற்றையும் அவர்களுக்கு அறிவி. அவர்கள் முன்னால் அச்சம் கொள்ளாதே, நாமும் உன்னை
அஞ்ச விடோம்@
18 இதோ இன்று நாடெங்கணும் உன்னை, யூதாவின் அரசர்களுக்கும் தலைவர்களுக்கும்,
அர்ச்சகர்களுக்கும் நாட்டின் மக்களுக்கும், அரணுள்ள நகராகவும் இருப்புத்
தூணாகவும்,வெண்கல மதிற் சுவராகவும் ஏற்படுத்தினோம்.
19 அவர்கள் உனக்கெதிராய்ப் போராடுவார்கள்@ ஆயினும் உன்னை மேற்கொள்ள மாட்டார்கள்@
ஏனெனில் நாம் உன்னோடிருக்கிறோம், உன்னை மீட்டுக் கொள்வோம், என்கிறார் ஆண்டவர்".