தமிழக வனப்பகுதியில் உள்ள அன்னிய மரக்கன்றுகளை அகற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சதீஷ் குமார், பரத் சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் அன்னிய மரக்கன்றுகளை வளர்த்து விற்க நர்சரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தடை உத்தரவை அறிவிப்பாணையாக வெளியிடவேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன், அன்னிய மரங்களை அப்புறப்படுத்தும் பணியை தமிழ்நாடு காகித நிறுவனத்திடம் ஒப்படைப்பது குறித்து 2 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.
அன்னிய மரக்கன்றுகளை வளர்த்து விற்க நர்சரிகளுக்கு தடை விதிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
Tamil News