No results found

    ஆக்கினை

    அமைப்பு : இரண்டு தாமரை இதழ்கள் கொண்ட கருநீல நிறத்தையும், முறையே இதழின் வலது பக்கம் சூரியனையும், இதழின் இடது பக்கம் சந்திரனையும், நடுவில் நீல நிற லிங்கத்தையும் கொண்ட சக்கரமாகும். இதன் அசைவுகளால் ஏற்படும் சப்தங்களை ஹ, ள என்ற எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன.

    இடம் : புருவ மத்தியில், இந்த சக்கரம் நமது புருவ மத்திக்கு நேராக மூளையில் அமைந்திருப்பதாக குறிப்பிடப் படுகிறது. இன்னும் சரியாக சொல்வதெனில் நமது நெற்றியில் உள்ள பள்ள முடிச்சுக்கு இனையாக இருக்கிறது. இதற்குத் 'திரிகூடம்" என்றும் பெயர். இந்த ஆக்ஞா சக்கரமும் மற்ற சக்கரங்களைப் போல சுழுமுனை நாடியில் அமைந்துள்ளது.

    ஆண் தெய்வம் : அர்த்தநாரீஸ்வரர் (சிவ-சக்தி), வெண்மை நிற லிங்கத்தின் நடுவே வலது பக்கம் பாதி சிவன் நீல நிற மேனியுடன் புலித் தோல் அணிந்தும், இடது பக்கம் பாதி சக்தி ரோஜா நிற மேனியுடன் சிகப்பு நிற புடவை அணிந்தும் காணப்படுகின்றனர். சிவன் கையில் திரிசூலமும், சக்தி கையில் தாமரை மலரும் உள்ளன.

    பெண் தெய்வம் : மகா குண்டலினி சக்தியானது இதில் பாயும் போது இதன் பெயர் வாகினி. இளம் ரோஜா வண்ணம் கொண்டவள். சிகப்பு நிற தாமரையில் அமர்ந்து சிகப்பு நிற புடவை அணிந்து ஆறு தலையும், நான்கு கைகளுடனும் காணப்படுகிறாள். மண்டையோடு, உடுக்கை, ஜப மாலை, முத்திரை ஆகியவற்றினை கைகளில் தாங்கி இருக்கிறாள். வண்ண கற்கள் பதித்த ஆபரணங்களை அணிந்திருக்கிறாள்.

    மிருகம் : -

    சம்பந்தப்பட்ட உறுப்புகள் : கண்கள், நெற்றியின் கீழ்ப்பகுதி

    பீஜமந்திரம் : (ॐ)ஆ... உ... ம்...

    பலன்கள் : சூரிய சந்திர சக்திகளை ஒன்றுபடுத்தி, இந்த சக்கரத்தின் மீது தொடர்ந்து தியானம் செய்வது, ஞாபக சக்தியை அதிகப்படுத்தும், விழிப்புணர்வை ஒருமுகப்படுத்தும். இது ஞானம், தெளிவு, போன்றவற்றுக்கான சக்கரம். விசுக்தியைப் பொறுத்தவரை, அந்தச் சக்கரம் தூண்டப்பட்டால் ஆற்றலோடு திகழமுடியுமே தவிர சமூகத்தில் நிறைய எதிர்ப்புகள் இருக்கும். சமூக வாழ்க்கையோடு உடன்பட இயலாது. மக்களிடமிருந்து விலகி வாழ்கிற நிலையிலேயே இருப்பார்கள். ஆனால் ஆக்கிஞை முழுவதுமாகத் தூண்டப்பட்டவர்கள் சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற ஞானவான்களாகத் திகழ்கிறார்கள். ஆக்ஞா சக்கரம் மலர்வதையே நெற்றி கண் திறப்பதாக பொதுவில் குறிப்பிடுகின்றனர். இத்தகைய மலர்ச்சி நிலையில் சாதகனின் கவனக்குவிப்பு, விழிப்புணர்வு, நினைவாற்றல் போன்றவை பல மடங்கு அதிகரிக்கும். வாழ்வின் ஞானத்தை எல்லாம் தன்னகத்தே ஈர்த்துக் கொண்ட உயரிய நிலை இது.

    Previous Next

    نموذج الاتصال