வாழைப்பூ, இது வியாதிகளுக்கெல்லாம் சஞ்சீவி போன்றது. சற்று துவர்ப்பாக
இருக்கும். பொடி யாக நறுக்கி சிறிது சுண்ணாம்பையோ அல்லது அரிசி கழுவிய
தண்ணீரையோ கலந்து சற்று வடிய வைத்தால் அதன் துவர்ப்புச் சுவையெல்லாம் நீராக
இறங்கி விடும். அதன் பிறகு அதை அவித்து பருப்பு கலந்து சமைத்து உண்ணலாம்.
வெகு சுவையாகவே இருக்கும்.
பேயன் வாழைப் பூவில் துவர்ப்பே இருக்காது. அதை அப்படியே (பட்டைகளை நீக்கி) சமைத்துச் சாப்பிட லாம்.
இதைப் பதமாகச் செய்து சாப்பிட்டு வந்தால் வெள்ளை நோய்
நீங்கும். ரத்த மூலம் போக்கும். உதிரக் கடுப்பு இருக்காது. கை, கால்
எரிச்சல் நீங்கும்.
வாழைப் பூவை நறுக்கி சாறு எடுத்து அத்துடன் பனங் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் மேற்கண்ட பிணிகள் எல்லாம் உடனே குணமாகும்.
வாழைப்பூக் கறி பித்தம், வாதம் உடலில் ரத்தக் குறைவு, கிராணி, வயிற்றில் பூச்சி முதலிய வியாதி களுக்கு சஞ்சீவி போன்றது.
வாழைப்பூ சாற்றில் தயிரைக் கலந்து உட்கொண்டால் ரத்தக்
கிராணி, பெரும்பாடு முதலியவை நீங்கும். நால தோலா சாற்றில் இரண்டு தோலா
தயிரைக் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை உட்கொண்டால் நல்ல குணம்
தெரியும்.
வாழைப்பூவை இடித்து சிற்றாமணக்கு எண்ணெய்யை விட்டு வதக்கி, கைகால் எரிச்சல் உள்ள இடத்தில் ஒற்றடமிட்டால் எரிச்சல் போகும்.
வாழைப்பூவை வாரத்திற்கொரு முறையேனும் சமைத்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- _புதுச்சேரி
- ஆன்மீகம்
- _இந்துக்கள்
- _இஸ்லாம்
- _கிறிஸ்துவம்
- _சித்தர்
- _மந்திரங்கள்
- _ஜோதிடம்
- _எண் கணிதம்
- _கோவில்கள்
- பெண்கள் உலகம்
- _கர்ப்ப காலம்
- _பெண்கள் பாதுகாப்பு
- _பெண்கள் மருத்துவம்
- _சமையல் குறிப்பு
- _குழந்தை பாதுகாப்பு
- _வீட்டுப் பராமரிப்பு
- _தோட்டப் பராமரிப்பு
- _செல்லப் பிராணிகள்
- மேலும் தகவல்
- _தொழில்நுட்பம்
- _ஆரோக்கியம்
- _மருத்துவம்
- _வாழ்வியல் முறை
- _இரத்தினக்கல்
- _வரலாறு
No results found