No results found

    உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி

    இஞ்சித் துவையலை ருசி பார்க்காத வர்கள் மிகவும் குறைவு. தவிர சமையலிலும் இஞ்சியை தாரளமாக பயன்படுத்திக் கொள்கிறேhம். பல பகுதியில் இஞ்சியை ஊறுகாயில் அதிகமாக சேர்க்கிறhர்கள்.
    இஞ்சிக்கு உஷ்ணப்படுத்தும் குணம் உண்டு என்றhலும் கபம், வாதம், சிலேத்துமம் ஆகிய திhpதோஷங்களையும் போக்குகிறது. பசியைத் தூண்டும். உடலுக்குப் பலத்தை யும், வீhpய விருத்தியையும் தரும்.

    ஞாபக சக்தியை வளர்க்கும். கல்லீலைச் சுத்தப்படுத்தும். வயிற்றில் சேர்ந்த வாயுவைப் நீக்கி பஞ்சு போல ஆக்கும். பிறகு அதிலுள்ள தீயப் பொருட்களையும், கிருமிகளையும் நீக்கி கபத்தால் உண்டாகும் எல்லா விதமான நோய்களையும் தடுக்கும்.

    எலுமிச்சம் பழரசம் இந்துப்பு இரண்டையும் சேர்த்துப் போட்ட இஞ்சி ஊறுகாய் கபத்தையும், வாதத்தையும் போக்கும்.

    முகம், மூக்கு தொண்டைகளைப் பற்றிய நோய்களையும், குன்மம், ஆஸ்துமா, பாண்டு நோய் ஆகியவற்றையும் இஞ்சி போக்கும்.

    நுரையீரல் நோய்களைக் கூட இஞ்சி குணப்படுத்துகிறது. அதனால் தினந்தோறும் கொஞ்சம் இஞ்சியை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

    ஆனால் ஒரு எச்சாpக்கை. இஞ்சியை அதிகமாக சாப்பிட்டால் தொண்டை கம்மி விடும். அதற்கு சர்க்கரையும், தேனும் மாற்றுப் பொருட்களாகும்.

    Previous Next

    نموذج الاتصال