No results found

    பள்ளி குழந்தைகளின் மன அழுத்தத்தை குறைக்கும் வழிகள்..

    பள்ளிக் குழந்தைகள் சந்திக்கும் கொடுமை மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட, புதிய செயலி ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார் அசாம் மாநிலம் ஷில்லாங் அடுத்த சிலிகான் பள்ளத்தாக்கைச் சேர்ந்த 10 வயது சிறுமி மாய் மாய் மெய்தாபகுன் மாஜாவ்.

    இளம் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான உலக அளவிலான போட்டியில் 7 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில், 26 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 26 பேரில் 22 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 4 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். இதில் மாஜாவ் உருவாக்கிய செயலி, அனைவரையும் கவர்ந்துள்ளது. மழலையர் பள்ளியிலிருந்து 2-ம் வகுப்பு வரை தமக்கு ஏற்பட்ட மன அழுத்தமே இத்தகைய செயலியை உருவாக்கக் காரணமாக இருந்ததாக மாஜாவ் தெரிவிக்கிறார்.

    இந்தச் செயலியின் மூலம் தங்கள் பிரச்சினையைப் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் மாணவர்கள் பகிர்ந்துகொள்ள முடியும். எத்தகைய பிரச்சினை என்று குறிப்பிட்டே அவர்கள் பகிர்ந்துகொண்டு, அதற்கான தீர்வு காண முடியும். இதனால் மன அழுத்தத்திலிருந்து அவர்கள் முழுமையாக வெளியே வர முடியும் என்று நம்பிக்கையாடு கூறுகிறார் மாஜாவ்.

    குழந்தைகளின் படைப்பாற்றலைக் கட்டுப்படுத்தாத சூழல் இருந்தால், முடிவுகள் எப்போதும் வியக்க வைக்கும் என்பதற்கு மாஜாவ் முன்னுதாரணமாக திகழ்கிறார்.

    Previous Next

    نموذج الاتصال