No results found

    பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்

    இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடினால் அதனை 'டயாபடீஸ்' என்கிறோம். குறைந்தால் அதன் பெயர் என்ன? அதுவும் உடலுக்குப் பிரச்னையா?

    இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தால் "ஹைப்போ கிளைசி மாலா" ஏற்பட்டு, கைகள் நடுங்கும். பதறும். உடனே ஒரு சாக்லெட் போன்ற இனிப்புப் பொருளை வாயில் போட்டுக்கொள்வது நல்லது. இன்சுலின் தவறுதலாக அதிகம் போட்டுக் கொண்டவர்களுக்கு இந்த அபாயம் உண்டு.

    ------oOo------


    சமையல் சோடா(cooking soda / baking soda) உபயோகிப்பது உடல்நலத்திற்குக் கெடுதலா? ஆமாம் எனில், அதற்கு மாற்று என்ன?

    உப்பு போல சமையல் சோடா என்பது இயற்கையானதில்லை. ஒரு வகையான கெமிக்கல்தான். எனவே, அதற்கு மாற்று கிடையாது. அதை அளவு தெரிந்து பயன்படுத்தினால், நமக்கு எந்தப் பிரச்னையும் கொடுக்காது. ஆனால், அளவுக்கதிகமாகப் பயன்படுத்தினால் டையரியா, டிஸன்ட்ரி போன்றவை ஏற்படலாம். ஒரு கிலோ இட்லி மாவுக்கு ஒரு சிட்டிகை (பிஞ்ச்) சோடா மாவு பயன்படுத்தினால், உப்பல் நன்றாக இருக்கும். அதிகமாகப் போட்டால் இட்லி உப்பாது. வயிறுதான் உப்பும்.


    ------oOo------



    பயணத்துக்கும் 'குமட்டலுக்கும்' என்ன தொடர்பு? கப்பல், விமானம், பஸ் பயணங்களில், சிலருக்கு வாந்தி வருவது ஏன்? பயணத்துக்கும் 'குமட்டலுக்கும்' தொடர்பு உள்ளதா?

    நம்முடய ஸ்திர நிலையை மூளை உணர்வதற்கு நான்கு சிக்னல்கள் தேவை.

    1. காதுகளின் உள்பகுதியில் உள்ள திரவம், முப்பரிமான சமநிலையை அறிவிக்கிறது.

    2. கண்கள், சுற்றுப்புறத்துக்கும் நமக்கும் உள்ள அசைவு வேறுபாடுகளை உணர்த்துகின்றன.

    3. காலிலும் உட்காரும் இடத்திலும் உள்ள அழுத்தம் மூலம் புவிஈர்ப்புவிசை நம் உடலை எப்படி பாதிக்கிறது, எது மேல், எது கீழ் என்பதை உணர்கிறோம்.

    4. தசைகளுடன் இணைந்த நரம்புகள், செய்திகள் உடலின் எந்தப் பகுதிக்கு நகர்கிறது என்பதை அறிவிக்கிறது.

    இந்த நான்கு செய்திகளுக்கிடையே முரண்பாடு ஏற்பட்டால், குமட்டல் வரும். குறிப்பாக, பிரயாணத்தின்போது புத்தகம் படித்துக்கொண்டிருந்தால் கண்கள் நகர்வதை கவனிப்பதில்லை. காதுகள் நகர்தலை உணரும்போது, விளைவு சுழட்டல் குமட்டல்! இது அதிகமாக இருந்தால் மருத்துவரை ஆலோசித்து ஆவோமின் மாத்திரை எடுத்துக் கொள்ளலாம்.
    Previous Next

    نموذج الاتصال