No results found

    தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுத்த முக்கிய முடிவுகள்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை கோட்டையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற அமைசச்ரவை கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை ஆகியவற்றை சட்டசபையில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும், ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பாக ஆய்வு செய்ய தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு அமைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் இருந்தும் பல்வேறு அரசியல் கட்சிகள் தரப்பிலும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஆன்லைன் ரம்மி விளையாடுவது ஆபத்தானது என்பதால் அதை தடை செய்யும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Previous Next

    نموذج الاتصال