No results found

    கர்மவினை பற்றி......

    கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வையே இப்பதிவு.

    1. நல்லவர்கள் ஏன் கஷ்டபடுகின்றார்கள்?

    2. கெட்டவர்கள் ஏன் எல்லா நலன்களுடன் வாழ்கின்றார்கள்?

    3. ஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒருவனுக்கு ஏன் அதிக கஷ்டம் ஏற்படுகின்றது?

    4. கர்மவினைகளை அனுபவித்துதான் தீர்க்க வேண்டுமா?

    போன்ற பல கேள்விகளுக்கு முழுவிளக்கமே இப்பதிவு. பதிவிற்குள் செல்வதற்குமுன் ஒரு கதையை பார்த்துவிடுவோம்.

    சித்திரபுரம் என்ற ஊரில் சித்தன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்துவந்தான். அவன் குணத்தில் நல்லவனாகவும் சிறந்த பக்திமானாக இருந்தபோதிலும் அவனுக்கு வாய்ந்த மனைவி
    கொடுமைக்காரியாக இருந்ததால் அவனது வாழ்க்கை மிகவும் கஷ்டத்திலேயே நகர்ந்தது.
    வேலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களை தியானத்திலும் பிராத்தனையிலும் செலவிட்டான். எந்த அளவிற்கு அவன் பக்தியில் மனதை செலுத்துகின்றானோ அந்த அளவிற்கு அவனை கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டன.

    அதே ஊரில் அவனுக்கு வித்தன் என்ற சூழ்ச்சி குணமுடைய பணக்கார நண்பன் இருந்தான். தனது இன்பத்திற்காக எந்த ஒரு
    கொடுமையான செயலையும்
    குணமுடையவனாக அவனிருந்தான்.
    அவனுக்கு நல்ல குணமுடைய பக்தியில் சிறந்த மனைவியும் அமைந்திருந்தாள்.

    இருப்பினும் அவனுக்கு கடவுள் நம்பிக்கை என்பது துளிகூட இல்லை. அவனுக்கு சித்தனின் கடவுள் நம்பிக்கையை கேலி செய்வது என்பது வாடிக்கையான வேலை. இதன் காரணமாக ஒரு கட்டத்தில் இருவரிடையே சண்டையே வந்துவிட்டது. கோபத்தில் வெகுண்டெழுந்த சித்தன் இறைவன்
    மீது தனது பக்தி உண்மையாயிருந்தால்
    இன்னும் ஒரு வாரத்தில் நீ செய்த
    தவறுக்கெல்லாம் தண்டனை அனுபவிப்பாய் என்று சாபமிட தொடங்கினான். சிரித்துக்
    கொண்ட வித்தன் அப்படி நடக்கவில்லை என்றால் நீ ஆன்மீகத்தை கைவிட வேண்டும்
    என்ற சவாலுக்கு இழுத்தான். இதற்கு
    ஒப்புக்கொண்ட சித்தன் தீவிரமான
    பிராத்தனையில் ஈடுபட்டான்.

    போட்டியின் கடைசி நாளும் வந்தது. அந்த நாளில் வித்தனோ காட்டிற்கு சென்று தேவைக்கு அதிகமான பறவைகளையும் விலங்குகளையும் வேட்டையாடி கொன்று விருந்திற்காக வீட்டிற்கு எடுத்து வந்து கொண்டிருந்தான். வரும்வழியில் களைப்பு தாங்காமல் ஒரு மரதினடியில் ஓய்வெடுக்க உட்கார்ந்தான். உட்கார்ந்த இடத்தில் எதோ உருத்துவதுபோல் இருந்ததனால் என்ன? என்று விலக்கி பார்த்தான். கணக்கிட முடியாத
    செல்வம் அங்கு புதைக்க பட்டிருந்ததை
    பார்த்து, அதையும் மூட்டையாக
    கட்டிக்கொண்டு இரட்டை சந்தேஷத்துடன் வீடு திரும்பினான். இதற்கிடையே வயலில் வேலை செய்துகொண்டிருந்த சித்தனை மாடு
    முட்டி கடுமையான காயங்களுடன்
    படுத்தபடுக்கை ஆக்கிவிட்டது விதி.

    இப்படி ஒரு முட்டாள் கணவனுடன் வாழ்வது அசிங்கம் என்று சித்தனின் மனைவி அவனைவிட்டு நீங்கினாள். தனது நிலையை நினைத்து உள்ளும் வெளியும் ஒவ்வொரு நொடியும் அழுதே தீர்த்தான். தான் பட்ட அவமானத்தால் இனி வாழ்ந்து பயனில்லை என்ற முடிவுக்கு வந்தான் சித்தன். உடல்
    ஊனத்தால் அவனால் தற்கொலை கூட செய்து கொள்ள முடியவில்லை. எப்படியோ எழுந்து தன் விட்டிற்கு பின்னடியுள்ள கிணற்றில்  குதித்தான். திடீரென்று தன்னை யாரோ
    தூக்குவது போல் உணர்ந்தான். ஆம் எந்த தெய்வத்தை அவன் பக்தியுடன்
    வணங்கினானோ அதே தெய்வம் அவனை காப்பாற்றி காட்சியும் கொடுத்தது. உடலாலும் மனதாலும் அவதிப்பட்ட அவனுக்கு வணங்க
    தோனவில்லை, மாறாக சண்டை போட
    தொடங்கினான். தனது ஆதங்கத்தையும் ஆத்திரத்தையும் கொட்டி தீர்த்தான். அனைத்தையும் பொருமையுடன் கேட்டுகொண்டிருந்த கடவுளோ அவனை தன்னோடு அனைத்து கொண்டார். அவனின்
    அரவணைப்பால் சற்று ஆறுதல் பெற்றான் சித்தன். இப்பொழுது கடவுள் பேச தொடங்கினார், சித்தா நீ இப்பிறவியில் நல்லவனாக பிறந்திருந்தாலும் முன்பிறவியில்
    வித்தனை விட கொடுமைகாரனாக இருந்தாய்.

    நீ உன் மனைவியை மதித்தது கூட
    கிடையாது. மாறாக வித்தனோ முன்பிறவியில் நல்ல காரியங்களையே செய்து வந்தான், அதனால் இப்பிறவியில் அவனுக்கு சகல
    நன்மைகளும் கிடைத்தது. மாறாக உனக்கோ நீ செய்த பாவங்களை அனுபவிக்க நேரிட்டது. என்னை அனுதினமும் நீ வணங்கியதால் நீ
    அனுபவிக்க வேண்டிய கர்மத்தின்
    பெருபாலனவையை நானே ஏற்றுகொண்டேன், மாறாக நீயோ அதில் சிறு பகுதியையே அனுபவிக்கின்றாய். ஆன்மீகத்தை தொடங்கும்.ஒருவன் முதலில் அவனது பாவபதிவையே அனுபவிக்க தொடங்கின்றான், மாறாக
    அக்கிரமங்கள் செய்யும் ஒருவனுக்கோ அவன் செய்த புண்ணியங்களை அனுபவித்தபின் அவன் பாவபதிவுகள் செயல்பட தொடங்கும்.

    வித்தனுக்கு கிடைத்த புதையலே
    அவனுடைய கடைசி புண்ணிய பதிவாகும்.அவன் செய்த அனைத்து புண்ணியங்களும் ஒட்டுமொத்தமாக செயல்பட்டு அவனுக்கு புதையலாக கிடைத்தது. இதுவரை நீ அனுபவித்த கஷ்டங்களில் உனது அனைத்து
    பாவங்களும் கரைந்துவிட்டன. இனி
    நடக்கவிருப்பதை நீயே உன் கண்ணால் பார்த்து தெரிந்து கொள் என்று சில
    அறிவுரைகளையும் கூறி மறைந்தார் கடவுள்.

    நாட்கள் செல்ல செல்ல சித்தனின் உடல்நிலை நலம் பெற தொடங்கியது. அவனது நெருங்கிய உறவினருக்கு வாரிசு இல்லாததால் அவரது சொத்துக்கள் அனைத்தும் சித்தனுக்கு
    கிடைத்தது. நல்ல குணமுடைய மனைவியும் சித்தனுக்கு அமைந்தாள். அதே சமயத்தில் வித்தனுக்கோ வினோதமான ஒரு நோய் தாக்கி
    படுத்தபடுக்கையாகி விட்டான். அவனது மனைவியும் திடீரென்று இறந்துவிட, அவன் கூட இருந்தவர்கள் அவனை ஏமாற்றி அவன் சொத்துக்கள் அனைத்தையும் பரித்துக்கொண்டு வெளியே துரத்திவிட்டனர். தனது நண்பனின் நிலை அறிந்து வருந்திய
    சித்தன், வித்தனையும் தன் இல்லத்திலேயே தங்க செய்து உதவினான்.

    ஒருவன் எந்த செயலை செய்தாலும் அல்லது நினைத்தாலும் அதற்குரிய பலனே வினை
    எனப்படுவது. அது நல்லதாக இருந்தால்
    நல்வினை, தீயதாக இருந்தால் தீவினை.
    ஆனால் இந்த வினைகளிலிருந்து தப்பிக்க
    விதிவிலக்குகளும் உண்டு. அதுதான்
    "பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பை
    ஏற்படுத்தி விடுவது". இதை புரிந்து கொள்ள
    வேண்டுமென்றால் ஒரு உதாரணத்தை
    பார்த்துவிடுவோம்.
    நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் மீது
    கல்லை எறிந்தீர்கள் என வைத்துக்கொள்வோம்.

    இது நீங்கள் செய்த செயல். அது அவர் காலில்
    பட்டு இரத்தம் வந்துவிடுகின்றது. இதை
    வினை என்று எடுத்துக்கொள்வோம். அந்த
    இடத்திலிருந்து நீங்கள் தப்பித்து
    ஓடிவிட்டீர்களானால் அந்த நிகழ்வுக்கான
    எதிர்வினை செயல்படும். எப்படியென்றால்
    நீங்கள் ஒரு தெரு வழியே செல்லும்போது
    உங்கள் கால் ஒரு கல்லில் மோதி இரத்தம் வர
    வேண்டும் என்ற ஒரு விதி செயல்படும்.

    நீங்கள் அந்த வழியே செல்லும்போது இந்த
    கர்மவினையிலிருந்து தப்பிக்க நினைத்தால்
    அந்த கல்லில் உங்கள் கால் படாமல் செல்ல
    வேண்டும். ஆனால் கர்மங்களிருந்து ஒருவன்
    தப்பிக்க நினைக்கும்போது அதாவது அந்த
    கல்லை தாண்டி செல்ல முற்படும்போது ஒரு
    மாடோ அல்லது வண்டியோ உங்களை
    குறுக்கே வந்து தள்ளிவிடும். முடிவாக கால்
    பட வேண்டிய இடத்தில் தப்பிக்க
    நினைத்ததனால் தடுக்கி விழுந்து அதே
    கல்லால் உங்கள் தலையில் அடிபட்டுவிடும்.
    ஆனால் அவருக்கு அடிப்பட்ட உடனே அதற்காக
    வருந்தி அவரிடம் மன்னிப்போ அல்லது
    மருத்துவ உதவி செய்து விடுகின்றீர்கள் என
    வைத்து கொள்வோம். இங்கேயும் அதே
    கர்மவினைதான் செயல்படும்.

    அதாவது நீங்கள்
    அந்த தெரு வழியே செல்லும்போது உங்கள்
    கால் அந்த கல்லில் மோதி இரத்தம் வர
    வேண்டும் என்ற அதே விதிதான் செயல்படும்.
    ஆனால் அது செயல்படும் விதம்தான் வேறு.
    எப்படியென்றால் நீங்கள் அதே தெரு
    வழியாகதான் செல்வீர்கள், ஆனால் உங்களை
    அறியாமல் மாட்டு சாணியிலோ அல்லது
    சேற்றிலோ காலை வைத்துவிடுவீர்கள்.

    இதனால் எந்த கல்லால் உங்கள் காலில் அடிபட
    வேண்டுமோ, அந்த கல்லில் உங்கள் காலில்
    உள்ள சேற்றை துடைப்பதற்காக
    தேய்த்துவிட்டு சென்றுவிடுவீர்கள். அதாவது
    பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பை
    ஏற்படுத்திவிட்டு சென்றுவிடுவீர்கள். இதில்
    அந்த பொருளுக்கும் உங்களுக்கும் எந்தவித
    சேதமும் ஏற்படவில்லை.

    நீங்கள் செய்த செயலுக்கான விதிப்படி அந்த
    கல்லிற்கும் உங்கள் காலிற்கும் ஒரு தொடர்பு
    ஏற்பட வேண்டும். அதை நீங்கள் செய்வதால்
    அந்த கர்மவினை அங்கேயே முடிவுபெறுகின்ற
    து. இதைதான் " தலைக்கு வந்தது
    தலைப்பாகையோடு போனது " என்பர்
    பெரியோர்கள். அந்த பொருளுக்கும்
    உங்களுக்கும் தொடர்பு ஏற்பட்டுவிட்டால்
    உங்கள் செயலுக்குரிய எதிர்வினையும்
    நடந்துமுடிந்து விடுகின்றது. உங்கள்
    செயலை கொண்டே வினையும், வினையை
    கொண்டே எதிர்வினையும், அந்த
    எதிர்வினையை செயல்படுத்த அந்த பொருளும்
    நிர்ணயிக்க படுகின்றதே தவிர மற்றபடி
    ஒன்றுமில்லை. இதைத்தான் " தீதும் நன்றும்
    பிறர் தர வாரா " என்றனர். எந்த செயலுக்கும்
    வினை ஏற்பட கூடாது என்றால் "நான்"
    என்பதை விட்டுவிட வேண்டும். ஆன்மீகத்தில்
    இதற்கு பெயர் பூரண சரணாகதி.
    அந்த விதிவிலக்கு என்பது கூட
    இவர்களுக்குதான். தன்னை அறிய
    முற்படுவதால் அவர்களுக்கு தரப்படும்
    சலுகைகள்தான் இது. ஏன் அவர்களுக்கு
    மட்டும்??
    எந்த ஒரு வினைக்கும் நீங்கள் தான் காரணம்
    என்ற புரிதல் ஏற்படும்போது உங்களை சுற்றி
    நடக்கும் அனைத்தையும் ஏற்று கொள்வீர்கள்.

    கடவுளே! எனக்கு ஏன் இப்படி ஒரு வாழ்க்கை?
    எனக்கு ஏன் இப்படி ஒரு கஷ்டம்?
    கெட்டவனெல்லாம் நல்லா இருக்கானே! என்ற
    எண்ணங்கள் மாறி உங்கள் தவறுக்கான
    வினைகள்தான் தற்போது நீங்கள்
    அனுபவித்துவரும் கஷ்டங்கள் என்ற ஆழமான
    புரிதல் ஏற்படும். புரிதல் ஏற்படும்போது
    எதையும் ஏற்றுகொள்ளும் பக்குவம்
    வந்துவிடும். அப்படிப்பட்ட பக்குவத்தை
    நீங்கள் அடையும்போது, உங்களின் 95%
    கர்மங்களை உங்களுக்காக வேறு ஒருவர்
    அனுபவித்து விடுவார். காரணம்!! நீங்கள்
    அவர்மீது கொண்டுள்ள அதிகப்படியான
    அசைக்கமுடியாத நம்பிக்கையே ஆகும். அந்த
    அவர் ஏற்கனவே பிறவிகடலை கடந்தவராக
    இருப்பார்.
    ஞானி ஒருவர் கூட்டம் நிறைந்த ஒரு தெரு
    வழியே சென்று கொண்டு இருந்தார்.

    திடீர்
    என்று அங்கே உள்ள சாக்கடையில்
    குதித்துவிட்டு பக்கத்தில் உள்ள தண்ணீர்
    குழாயில் காலை கழுவிவிட்டு
    சென்றுவிட்டார். இதை பார்த்தவர்களுக்கு அவர்
    பைத்தியகாரன் என்று தோனலாம். ஆனால்
    அவரை பொறுத்தவரை பொருளுக்கும்
    அவருக்கும் தொடர்பை ஏற்படுத்தி கொள்வது
    ஆகும். ஆனால் அவர் ஏற்படுத்திய தொடர்பு
    அவருடையது அல்ல!! அவரை நம்பி
    இருப்பவர்களின் கர்மவினைகளை தான் அவர்
    அச்செயலின் மூலம் தீர்த்து வைக்கின்றார்.
    இது எப்படி சாத்தியம்?? என்ற கேள்வி
    வரலாம்!! அந்த ஞானியை பொறுத்தவரை
    அவர் செய்யும் எந்த செயலுக்கும் வினை
    என்ற ஒன்று ஏற்படுவது கிடையாது.

    காரணம்? அவர் உள்ளே வெறும் வெற்றிடம்
    தான் உள்ளது. அதாவது அவருக்கு மனம் என்ற
    ஒன்று கிடையாது!! உள்ளே சூன்யமாக தான்
    இருக்கும்!! அவரிடம் எந்த எண்ணங்களும்
    உதிப்பதும் கிடையாது!! மறைவதும்
    கிடையாது!! இதுவே " சும்மா இருப்பது "
    என்று சொல்லப்படுகின்றது. ஒருவன்
    அவர்மீது கொண்டுள்ள தீவிர பக்தியால் அந்த
    வெற்றிடத்தில் இவனது எண்ணங்கள்
    சுற்றிகொண்டிருக்கும். இவனுக்கு அன்று
    சாக்கடையில் விழுந்து அடிபட வேண்டும்
    என்ற விதி இருக்கும், ஆனால் இவன்
    உண்மையாக இருப்பதால் இவனுக்கு பதிலாக
    அந்த ஞானி அந்த விதியை முடித்து
    வைக்கின்றார். மேலும் அவர் மீது நம்பிக்கை
    கொண்டுள்ள ஒவ்வொருவரின் எண்ண
    அலைகளும் அங்கே உள்ள வெற்றிடத்தில்
    சுற்றிக் கொண்டே இருக்கும். இவர்கள் தன்
    தவறை உணர்ந்து தனக்கு உண்மையாக நடக்க
    தொடங்கும்போது அந்த ஞானி எதோ ஒரு
    செயலின் மூலம் இவர்களின் பாவபுண்ணிய
    கணக்குகளை அழித்துவிடுவார்.
    முடிவில் இவர்களும் அந்த ஞானியின்
    நிலைக்கே வந்துவிடுகின்றனர்.

    அதனால் தான்
    ஞானிகள் அருகில் இருக்கும்போது எதையும்
    கேட்காதீர்கள் என்று கூறுவது. காரணம்!!
    நீங்கள் கேட்டுதான் பெறவேண்டும் என்ற
    அவசியமே அங்கு கிடையாது. மாறாக நீங்கள்
    கேட்க நினைப்பது கூட சிறியதாக தான்
    இருக்கும். அவர் கொடுக்க நினைப்பதோ
    கணக்கில் அடங்காதவையாக இருக்கும். இதற்கு
    அவரிடம் பூரண சரணாகதி அடைந்தலே
    சிறந்தது ஆகும்.

    இதில் பூரண சரணாகதி என்பது இனி
    அனைத்தும் உன் செயல் என பற்றுகளை
    துறப்பதுவே ஆகும். "நான்" என்ற
    எண்ணத்திற்கு பதிலாக இனி எல்லாம் "நீ" என்ற
    எண்ணத்தை கொண்டு வருவதே சரணாகதி.
    அதற்குபிறகு உங்களுக்கென்று தனிப்பட்ட
    எந்தவொரு செயலும் இருக்காது, இருக்கவும்
    கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு
    செயலும் அவன் செய்வதாகவே இருக்க
    வேண்டும்.

    இறைவனை நோக்கிய உங்களது பிராத்தனை
    அல்லது வேண்டுதல் எந்த முறையில் இருக்க
    வேண்டும் என்பதை விளக்குவதே இப்பதிவு.

    மேலும் இப்பதிவு முந்தைய பதிவான
    கர்மவினையின் தொடர்ச்சி ஆகும்.
    மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும்
    சூழ்நிலைக்கு தகுந்தவாறு தேவைகள் என்பது
    மாறிக்கொண்டே இருக்கும். அந்த
    தேவைகளுக்கு தகுந்தவாறு
    வேண்டுதல்களும் மாறிக்கொண்டே இருக்கும்.

    ஆனால் ஆன்மீகத்தில் ஓரளவு புரிதல்
    உள்ளவர்களை பொருத்தவரை, அவர்களுடைய
    வேண்டுதல் என்பது அவர்கள் வாழ்நாளில்
    "ஒரே ஒருமுறை" தான் இருக்குமே தவிர
    ஒவ்வொரு முறையும் இருக்காது. ஏனென்றால்
    அவர்கள் முடிவான ஒன்றை முதலிலேயே
    வேண்டியும் விடுவர். அந்த வேண்டுதலில்
    அத்தனையும் அடங்கியும் விடும். இதை
    புரிந்துகொள்ள ஒரு சிறு கதையை பார்ப்போம்.

    ஒரு ஏழை தாயின் மகனுக்கு படிப்பு
    அவ்வளவாக வரவில்லை. அவளுக்கு
    தெரிந்ததெல்லாம் அவள் வழிபடும் தெய்வம்
    மட்டும்தான். தன் மகன் பரிட்சையில் தேர்ச்சி
    பெற்று நல்ல வேலைக்கு செல்ல வேண்டும்
    என்பது அவள் கனவு. கடவுளிடமும் இதை
    குறித்து வேண்டுதல் வைக்கவே, மகனும்
    பரிட்சையில் தேர்ச்சி பெற்றான். ஆனால்
    இவனது வினை வேலை கிடைக்கவே இல்லை.
    மறுபடியும் கவலை கொண்ட தாய் வேண்டவே
    மகனுக்கு நல்ல வேலையும் கிடைத்தது.
    சிறிது காலம்தான் சென்றது மகனுக்கு விபத்து
    ஏற்பட்டு படுக்கையில் இருந்தான். அத்தாய்க்கு
    தெரிந்ததெல்லாம் அவனே என்பதால்
    மறுபடியும் ஒரு வேண்டுதல்!!

    இதுவே அத்தாய் கடவுளே "எனக்கு
    அமைதியையும் சந்தோஷத்தையும் கொடு"
    என்று ஒரே ஒருமுறை மட்டும்
    வேண்டியிருந்தால், அவள் வாழ்க்கை
    வசந்தமாகி இருக்கும். புரியும்படி கூற
    வேண்டுமென்றால் ஒருவனுடைய வேண்டுதல்
    என்பது நிரந்தரமான முடிவான ஒன்றாக இருக்க
    வேண்டும். அத்தாய் வேண்டியது எல்லாமே
    தற்காலிகமான தீர்வை தரக்கூடியது என்பதால்
    ஒவ்வொரு முறையும் வேண்ட வேண்டிய
    அவசியம் இருந்தது. மேலும் எதிர்வரும்
    கர்மவினை இதுதான் என்பது யாருக்கும்
    தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கூடவே எனக்கு
    இந்த தேவை நிறைவேறினால் நான்
    நிம்மதியாக இருப்பேன் என்ற தவறான
    கணக்கை போட்டுக் கொண்டு தற்காலிக
    தீர்வை நாடுகின்றோம்.

    உண்மையில் எந்த ஒன்றில் எல்லாம்
    அடங்குமோ!! அடக்கமோ!! அந்த ஒன்றை
    வேண்டுதலாக வைக்க வேண்டும். அப்படி
    அந்த வேண்டுதல் நிறைவேறும் பொழுது
    அவனுக்கு அனைத்தும் வசமாகி விடுகின்றது.
    எனவே அவனது வேண்டுதல் என்பது ஒரே
    ஒருமுறையோடு முடிவடைந்து விடுகின்றது.
    இதில் உங்களை சுற்றி உள்ளவர்களும் பயன்
    பெறுவர். எப்படியென்றால் உங்கள்
    அமைதியும் சந்தோஷமும் உங்களை சுற்றி
    உள்ளவர்களையும் சார்ந்தே உள்ளது.

    உங்கள்
    தாய்க்கு உடம்பு சரியில்லை என்றாலோ,
    உங்கள் மனைவி கோபபட்டலோ, உங்கள்முன்
    ஒரு நாய் குட்டி கஷ்டப்பட்டாலோ, உங்களுக்கு பணக்கஷ்டம் ஏற்பட்டாலோ உங்களால்
    அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க முடியுமா?? முடியாதல்லவா!! எனவே உங்கள் அமைதி என்ற வேண்டுதல் நிறைவேற உங்களை சார்ந்த மற்றும் உங்களை சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கை தரமும் நல்லவைகளாக மாற்றம் பெறகின்றன.

    இப்பதிவு உங்களுக்கு தெளிவாக புரிந்தால் இறைவனை நோக்கிய உங்களது
    பிராத்தனையும் ஒருமுறைதான்!!
    Previous Next

    نموذج الاتصال