No results found

    ஸ்ரீ சக்கரம்

    வீட்டில் அடிக்கடி பிரச்சனைகளும், துன்பங்களும் வந்து கொண்டே இருந்தால் அந்த வீட்டில் தோஷம் இருப்பதாக கருதப்படுகிறது. சிலருக்கு கிரக தோஷம் என்றால், சிலருக்கு மனை தோஷமாக அமைந்து விடுகிறது. பார்த்து பார்த்து கட்டிய வீட்டில் வாழ முடியாமல் போனவர்கள் எவ்வளவோ பேர் இருக்கின்றனர். ஆனால் இந்த சிலரோ கட்டிய வீட்டில் இருந்தும் கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருப்பதாக புலம்புவார்கள். இதற்கு காரணம் மனை தோஷம் அந்த வீட்டில் இருப்பது தான். கிரக தோஷங்களும், மனை தோஷமும் நீங்க இந்த ஒரே ஒரு சக்கரத்தை உங்கள் பூமியில் புதைத்து வைத்தால் போதும். பிறகு நிலைமை சீராகி விடும் என்பது முற்றிலும் உண்மை. 

    ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு செல்லும் பொழுது ஆரம்ப காலகட்டத்திலேயே அந்த வீடு சரியானதா? இல்லையா? என்பது தெரிந்துவிடும். ஆனால் அதை உணர்வதற்குள் பல மாதங்கள் சென்றுவிடும் என்பது தான் வேதனைக்குரிய விஷயம். இந்த வீட்டிற்கு வந்த பிறகு தான் ஆரோக்கிய பிரச்சனைகள் வருகிறது அல்லது கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் வருகிறது, எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் கையில் இல்லை, ஒரு ரூபாய் கூட சேர்த்து வைக்க முடியவில்லை, அடிக்கடி ரத்த காயங்கள் ஏற்படுகிறது, வேலை போய்விட்டது இது போன்ற விஷயங்கள் உங்களுக்கு தொடர்ந்து நடந்தால் அந்த வீட்டில் மனை தோஷம் உள்ளது என்பது தான் உண்மை. இவை சொந்த வீடாக இருந்தாலும், வாடகை வீடாக இருந்தாலும் பொருந்தும். எனவே இத்தகையவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கின்றோம்.

    வீட்டில் பண கஷ்டம் இருந்தாலும், மற்ற பிரச்சினைகள் இருந்தாலும் இந்த சக்கரத்தை வாங்கி வந்து மூன்று இடங்களில் வைத்து விட்டால்! இருக்கும் அத்தனை பிரச்சனைகளும் நீங்கும் என்பது ஐதீகம். அதைத்தான் ‘ஸ்ரீசக்கரம்’ எனக் கூறுவார்கள். ஸ்ரீ சக்கரம் இருக்கும் வீட்டில் துஷ்ட சக்திகள் அணுகாது. அதுமட்டுமல்லாமல் ஸ்ரீசக்கரத்தை இந்த மாதிரி பயன்படுத்தினால் மனை தோஷம் விலகி செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. 

    ஸ்ரீ சக்கரம் 3 வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சக்கரத்தை பூஜை அறையில் கிழக்கு திசை நோக்கி வையுங்கள். பின்னர் இதற்கு தினமும் மஞ்சள், குங்குமம் இட்டு தூப தீபம் காண்பித்து வர நவகிரக தோஷம் நீங்கி துன்பங்கள் குறையும் என்பது நம்பிக்கை. அது போல் இரண்டாவது ஸ்ரீ சக்கரத்தை பீரோவில் நீங்கள் பணம் வைக்கும் லாக்கர் பகுதியில் கதவை நோக்கி வையுங்கள். இதற்கும் மஞ்சள், குங்குமம் இட்டு பூஜை செய்யும் பொழுது ஆரத்தி காண்பியுங்கள். இவ்வாறு செய்வதால் தரித்திரம் நீங்கி மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

    Previous Next

    نموذج الاتصال