பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரிய விரதங்களால் தலையாயது.
விரதம் ஏற்பவர்கள், வளரபிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களாலும் வரும்
திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க
வேண்டும். பிறகு சிவபுராணம், சிவ நாமாவளாகளை படித்து, முடிந்தவர்கள் மௌன
விரதம் இருந்து, மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு
பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வருதல் வேண்டும். பிரதோஷ
விரதம் முடிந்ததும், வேதம் ஓதும் அந்தணர்களுக்கு தானம் வழங்கி விரதத்தை
பூர்த்தி செய்தல் நலம்.
நலம் தரும் நந்திகேஸ்வரர்
நந்தி தேவருக்கு ருத்ரன் என்றொரு பெயரும் உண்டு. ருத் -
என்றால் துக்கம். ரன் - என்றால் ஓட்டுபவன். ருத்ரன் - என்றால் துக்கத்தை
விரட்டுபவன் என்று பொருள்.
பிரதோஷகாலத்தில் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை போட்டு நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் கலந்து வைத்து பூஜை செய்கிறார்கள்.
எனவே, பிரதோஷ தினத்தன்று மறவாமல் நந்திகேஸ்வர வழிபாடு செய்ய வேண்டும்.
சோம சூக்தப் பிரதட்சணம்
மற்ற நாட்களால் ஆலயத்தில் மூன்று முறை வலம் வரும் வழக்கத்திற்கு மாறாக சோம சூக்கப் பிரதட்சணம் செய்ய வேண்டும்.
ஆலகால விஷம் தேவர்களை முன்னும் பின்னும், வலமும்
இடமுமாகத் துரத்தியது. தேவர்கள் அஞ்சி நடுங்கி ஒடுங்கி கயிலை மலைக்கு
ஓடினார்கள். இறைவனை வலமாக வந்து உள்ளே சென்று பரமனைச் சரணடையலாம் என்று
எண்ணிய அவர்களை ஆலகால விஷம் அப்பிரதட்சணமாகச் சென்று எதிர்த்தது.
இதைக்கண்டு அஞ்சிய தேவர்கள் வந்த வழியே திரும்பினர். ஆலகால விஷம் அந்த
பக்கதிலும் எதிர்த்துச் சென்று பயமுருத்தியது. இவ்வாறு தேவர்கள் வலமும்
இடமுமாய் வந்த அந்த நிகழ்சிதான் சோமசூக்தப் பிரதட்சணம் எனப் பெயர் பெற்றது.
பிரதட்சண முறை
முதலில் சிவலிங்கத்தையும் தேவரையும் வணங்கிகொண்டு,
அப்பிரதட்சணமாகச் சண்டேசுவரர் சந்நிதி வரை சென்று அவரை வணங்கி கொண்டு,
அப்படியே திரும்பி வந்து முன்போல சிவலிங்கத்தையும் ரிஷப தேவரையும் வணங்கிக்
கொண்டு வழக்கம்போல் பிரதட்சணமாக ஆலயத்தை வலம் வரும்போது சுவாமி அபிஷேகத்
தீர்த்தம் விழும் நிர்மால்யத் தொட்டியைக் கடக்காமல் அப்படியே வந்த வழியே
திரும்பி அப்பிரதட்சணமாக சந்நிதிக்கு வந்து சிவலிங்கத்தையும் ரிஷபதேவரையும்
வணங்க வேண்டும். இfவ்வாறு மூன்று முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால்
அனேக அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என நூல்கள் கூறுகின்றன.
இவ்வாறு ஆலயத்தில் பிரதோஷ வழிபாட்டை முடித்தபின்
வீட்டிற்குச் சென்று உணவருந்தல் வேண்டும். சனிக்கிழமை வரும் பிரதோஷம்
மிகவும் விசேஷமானது.
பிரதோஷ வழிபாடு செய்ய மாலயனாதி வானவர்களும் சிவாலயம்
செல்வார்கள். ஆதலால் பிரதோஷ நேரத்தில் திருமால் கோயில்களால் வழிபாடு
செய்வதில்லை. ஒவ்வொரு நாளும் மாலை நாலரை, முதல் ஆறுவரை பிரதோஷ நேரமாகும்.
இது தினப் பிரதோஷம் எனப்படும்.
சிவனை வழிபட ஏற்ற காலம் சாயரஷை. அதிலும் சிறந்தது
சோமவாரம். அதனினும் சிறந்தது மாத சிவாரத்திரி. அதனினும் சிறந்தது பிரதோஷம்.
பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை
பெறுகிறார்கள். தரித்திரம் ஒழியவும், நோய் தீரவும், கெட்ட நோய்களின் துயர்
மடியவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும்.
பிரதோஷ பூஜையின் போது அபிஷேகப் பொருட்களால் விளையும் பலன்கள்:-
1. பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
2. தயிர் - பல வளமும் உண்டாகும்
3. தேன் - இனிய சாரீரம் கிட்டும்
4. பழங்கள் - விளைச்சல் பெருகும்
5. பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்
6. நெய் - முக்தி பேறு கிட்டும்
7. இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும்
8. சர்க்கரை
- எதிர்ப்புகள் மறையும்
9. எண்ணெய் - சுகவாழ்வு
10. சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்
11. மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- _புதுச்சேரி
- ஆன்மீகம்
- _இந்துக்கள்
- _இஸ்லாம்
- _கிறிஸ்துவம்
- _சித்தர்
- _மந்திரங்கள்
- _ஜோதிடம்
- _எண் கணிதம்
- _கோவில்கள்
- பெண்கள் உலகம்
- _கர்ப்ப காலம்
- _பெண்கள் பாதுகாப்பு
- _பெண்கள் மருத்துவம்
- _சமையல் குறிப்பு
- _குழந்தை பாதுகாப்பு
- _வீட்டுப் பராமரிப்பு
- _தோட்டப் பராமரிப்பு
- _செல்லப் பிராணிகள்
- மேலும் தகவல்
- _தொழில்நுட்பம்
- _ஆரோக்கியம்
- _மருத்துவம்
- _வாழ்வியல் முறை
- _இரத்தினக்கல்
- _வரலாறு
No results found