No results found

    இலங்கையில் இருந்து புறப்பட்டது சீன உளவு கப்பல்

    சீன உளவு கப்பல் யுவான் வாங்-5 கடந்த 16-ம் தேதி இலங்கை துறைமுகத்துக்கு வந்தது. அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இந்த கப்பல் தென் இந்தியா முழுவதையும் உளவு பார்க்கும் ஆற்றல் கொண்டிருப்பதால் மத்திய அரசு இந்திய கடற்படை கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த உளவு கப்பல் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் 22-ம் தேதி வரை நிற்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அம்பாந்தோட்டை துறைமுகத்தில் உளவு கப்பலுக்கு எரிபொருள் நிரப்பும் பணிகள் நடந்து வந்தன. எரிபொருள் தவிர உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை சேகரிக்கும் பணியிலும் உளவு கப்பலைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில், எரிபொருள், உணவு பொருட்கள் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்ததைத் தொடர்ந்து சீன உளவு கப்பலான யுவான் வாங் 5 கப்பல் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து இன்று புறப்பட்டது. சீன உளவு கப்பல் இந்தியாவின் செயற்கை கோள்களையும், தென் இந்தியாவில் உள்ள கடற்படை தளங்களையும் உளவு பார்க்கும் என்று கருதப்பட்டது. ஆனால் அத்தகைய பணிகள் எதையும் செய்யக் கூடாது என்று இலங்கை நிபந்தனை விதித்து இருந்தது.

    Previous Next

    نموذج الاتصال