No results found

    ஆரோக்கியமாக வாழ்வதற்கு பெண்கள் செய்ய வேண்டியவை…

    நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஒருசில பழக்கங்களை கட்டாயம் தொடர்ந்து பின்பற்றியாக வேண்டும். ஆண்களை பொறுத்தவரையில் புகைப்பழக்கம்தான் ஆயுளை குறைக்கும் எமனாக விளங்குகிறது. புகைப்பழக்கம் நுரையீரலின் ஆயுளை குறைத்து நாள்பட்ட நோய் பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடும். தம்பதியரை பொறுத்தவரையில் ஆனந்தமான வாழ்க்கையே ஆரோக்கியம் காக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். திருமணமாகாமல் தனியாக வசிப்பவர்களை விட சந்தோஷமாக வாழ்க்கை நடத்தும் தம்பதிகள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

    இது தொடர்பான ஆய்வுக்காக திருமணமானவர்கள், திருமணமாகாதவர்கள் இருவரின் ரத்த அழுத்தத்தை பரிசோதித்திருக்கிறார்கள். இதில் திருமணமாகாதவர்களை விட திருமணமான தம்பதியரின் ரத்த அழுத்தம் குறைவாக இருப்பது தெரியவந்தது. அதேவேளையில் நிம்மதியாக வாழும் தம்பதிகளின் ரத்த அழுத்தம் இரவில் தூங்கும்போது சீராக இருப்பதும், சண்டையும், சச்சரவுமாக இருக்கும் தம்பதிகளின் ரத்த அழுத்தம் இரவிலும் அதிகமாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அதுவே இதயம் சார்ந்த நோய் பாதிப்புகளுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்துவிடுகிறது.

    டீன் ஏஜ் பெண்களை பொறுத்தவரை காலையில் சாப்பிடாமல் பட்டினியாக இருந்தால் ‘ஸ்லிம்’ ஆகிவிடலாம் என்ற கருத்து நிலவுகிறது. அப்படி காலை உணவை தவிர்க்கும் பெண்கள், மற்றவர்களை விட உடல் பருமனாகுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. குழந்தைகளை பொறுத்தவரை காலை உணவை சாப்பிடும் குழந்தைகள் சுறுசுறுப்பாக இருப்பதும், காலையில் ஒழுங்காக சாப்பிடாத குழந்தைகள் சோர்வாக இருப்பதும், காலையில் சாப்பிடும் குழந்தைகளை விட சுமார் 2 கிலோ அதிகமாக இருப்பதும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. டி.வி, கணினி, லேப்டாப், டேப்லெட் போன்ற மின்னணு சாதனங்களில் அதிக நேரம் செலவழிப்பதை தடுப்பது குண்டாவதை தடுக்கும் என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

    Previous Next

    نموذج الاتصال