No results found

    சசிகலா-டி.டி.வி.தினகரனை விரைவில் சந்திப்பேன்: ஓ.பன்னீர்செல்வம் தகவல்

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் எதிரும், புதிருமாக செயல்பட்டு வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை அ.தி.மு.க.வில் மீண்டும் சசிகலா குடும்பம் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். எனவே சசிகலா, டி.டி.வி.தினகரனை எந்த நிலையிலும் கட்சியில் சேர்ப்பதில்லை என்பதில் தீவிரமாக இருக்கிறார். இந்த விஷயத்தில் உறுதியாக இருப்பதால்தான் கட்சி தொண்டர்கள் ஆதரவு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். ஆனால், சசிகலாவுக்கு எதிராக ஒரு கட்டத்தில் தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் இப்போது சசிகலாவுக்கு ஆதரவு கரம் நீட்டி இருக்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி தலைமை இல்லாத அ.தி.மு.க.வை உருவாக்குவது தான் ஓ.பன்னீர்செல்வத்தின் திட்டம். அதற்காகத்தான் மாவட்டங்களில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களும் இணைந்து செயல்படும்படி ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்து இருந்தார். எப்படியாவது தனது தரப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ள ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரையும் கட்சியில் சேர்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் நேரில் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். இதுபற்றி ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், "கட்சி நலன் கருதி, சசிகலா, டி.டி.வி.தினகரன் இருவரையும் விரைவில் சந்திப்பேன்" என்றார்.

    Previous Next

    نموذج الاتصال