No results found

    பெண்கள் சிவப்பு இறைச்சியை அதிகளவு சாப்பிட்டால் இந்த நோய் வரலாம்…

    சிவப்பு இறைச்சியில்(Red Meat ) புரதம் அதிகம் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆகையால் குறிப்பிட்ட வயதுக்கு மேல் பெண்கள் சிவப்பு இறைச்சி உண்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு எதனால் சிவப்பு இறைச்சியை உண்ண கூடாது தெரியுமா? அதை பற்றி இப்போது காணபோம்.

    அடுத்த தடவை நீங்கள் இரவு நேர உணவை சமைப்பதாக இருந்தால் அதில் சிவப்பு இறைச்சியை தவிர்த்து நல்லது. அதற்கு பதிலாக சுத்தமான சால்மன் மீன் அல்லது தோல் அற்ற சிக்கனை சமைக்கலாம். ஏனெனில் ஹார்வர்ட் பல்கலைகழகம் தற்பொழுது நடத்திய ஆய்வில் சிவப்பு இறைச்சியின் காரணமாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கு அதிக ஆபத்துகள் இருப்பதாகவும் கண்டறிந்துள்ளது.

    * மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைக்க, தினசரி சிவப்பு இறைச்சி உணவாக எடுத்துக்கொள்வதற்கு மாற்றாக கோழி, மீன் மற்றும் தானியம், விதைகளை போன்ற குறைத்த புரதத்தை உடைய உணவுகளை சேர்த்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.

    * 2014 ஆம் ஆண்டு பி.எம்.ஜே எனும் பத்திரிக்கை வெளியிட்ட ஆய்வில், ஆய்விற்காக அவர்கள், 20 ஆண்டுகளுக்கு 89,000 பெண்களை பின் தொடர்ந்தனர். அவர்கள் பதப்படுத்தப்படுத்தப்பட்ட உணவுகளான சிவப்பு இறைச்சி அதாவது, மாட்டிறைச்சி, பன்றி மற்றும் ஆட்டு இறைச்சி மற்றும் கோழி, மீன், மற்றும் பருப்பு வகைகளான பீன்ஸ், பயறு, பட்டாணி மற்றும் விதைகள் போன்றவற்றை தினமும் எவ்வளவு உணவை எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை ஆராய்ந்தது.

    * பெண்களிடம் இதைப்பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதில் சிவப்பு இறைச்சியை அதிகமாக எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 22 சதவீதம் அதிகமாக இருப்பது ஆய்வில் தெரியவந்தது. கூடுதலாக ஒரு நாளைக்கு 2 முறை எடுத்துக்கொள்ளும் சிவப்பு இறைச்சியும் புற்றுநோய்க்கான ஆபத்தை மேலும் 13 சதவீதம் அதிகப்படுத்துகிறது.

    * ஆனால் சிவப்பு இறைச்சிக்குமாறாக ஒரு நாளைக்கு ஒரு முறை மாற்றி கோழி போன்ற கறியை எடுத்துக் கொள்வதன் மூலம் மார்பக புற்றுநோய்க்கான அபாயத்தை 17 சதவீதம் குறைக்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது .​

    சிவப்பு இறைச்சிக்கும் மார்பக புற்றுநோய்க்கும் தெளிவான அளவில் தொடர்புகள் இல்லை என்றாலும் இதுகுறித்து ஆராய்ச்சியாளர்களுக்கு சிலர் யுகிக்கின்றனர். அதாவது அதிக வெப்பநிலையில் சிவப்பு இறைச்சியை தயாரிக்கும்போது, புற்றுநோயை உண்டாக்கும் துணை விஷயங்கள் வெளியிடுவதாக கூறப்படுகிறது.

    அடுத்த கோட்பாடு என்னவென்றால் பெண்களின் ஹார்மோன் அளவு அதிகரிக்க காரணமான இந்த கால்நடைகளின் வளர்ச்சிக்கு அதிக ஹார்மோன்கள் தேவையின் காரணமாக அவற்றை உண்பதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வர காரணமாக உள்ளது.

    மேலும் சிவப்பு இறைச்சியை பதப்படுத்துவதன் மூலம் அதில் உள்ள நைட்ரேட்டுகள் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்துடன் தொடர்புடையவை.

    Previous Next

    نموذج الاتصال