கள்ளக்குறிச்சி கலவரத்தின்போது கைது செய்யப்பட்ட 4 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் ஸ்ரீமதி என்ற 12ம் வகுப்பு மாணவி மரணம் அடைந்ததையடுத்து, கடந்த மாதம் 17-ந் தேதி பள்ளி முன்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தின் போது பள்ளியில் இருந்த பொருட்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். இதுவரை 367 பேர் பேரை போலீசார் கைது செயதுள்ளனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கலவரத்தின்போது கைது செய்யப்பட்ட பூவசரன், பரமேஸ்வரன், வசந்தன், சஞ்சீவி ஆகிய 4 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டுக்கு சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இவர்களில் பூவரசன் என்பவர் மாடுகளை திருடியதற்காகவும், மற்ற 3 பேர் போலீசாரின் வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும் கைது செய்யப்பட்டவர்கள்.
கள்ளக்குறிச்சி கலவரம்- 4 பேர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம்
Tamil News