No results found

    புதுச்சேரிக்கு ரூ.10,606 கோடி பட்ஜெட்: நீங்கள் அறிய வேண்டிய 12 தகவல்கள்

    புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.10,696 கோடிக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 21 வயது முதல் 57 வயது வரை உள்ள குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அத்துடன் அவர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 2022‌ - 2023ஆம் ஆண்டுக்கான 15வது சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடர் இன்று‌ தொடங்கியது. இதில் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ரூ.10,696.61 கோடிக்கணக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். முன்னதாக கடந்த மார்ச் மாதம் அரசின் அத்தியாவசிய தேவைகளுக்கான இடைக்கால பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் 5 மாதங்களுக்கு ரூ.3,613 கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த பட்ஜெட் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. புதுச்சேரி பட்ஜெட்... இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000..மாணவர்களுக்கு இலவச லேப்டாப் -ரங்கசாமி அதிரடி புதுச்சேரி பட்ஜெட்... இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000..மாணவர்களுக்கு இலவச லேப்டாப் -ரங்கசாமி அதிரடி இதையொட்டி மீதமுள்ள நிதியாண்டுக்கான சுமார் ரூ.11 கோடி நிதிநிலை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு இந்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
    1. கல்வித் துறையுடன் உள்ள விளையாட்டு இளைஞர் நலன் துறை பிரிவு தனித் துறையாக துவங்கப்படும்.
    2. புதுச்சேரியில் தேசிய சட்ட பல்கலைக்கழகம் தொடங்கப்பட உள்ளது. இதற்கான துவக்க விழாவில் பிரதமர் பங்கேற்க உள்ளார்.
    3. ரூ.1,596 கோடி மின் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
    4. தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த துறைக்கு ரூ.31.05 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    5.புதுச்சேரி கடல் பகுதியில் 'மிதவை படகுத் துறை' அமைக்கப்படும்.
    6. காரைக்கால் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும். ரூ.80 கோடியில் புதிய அரசு பொது மருத்துவமனை கட்டப்படும்.
    7. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில்களில் உள்ள ஆவணங்கள் மற்றும் சொத்துக்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.
    8. புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்திற்கு ஏற்கெனவே ரூ.1 கோடி வழங்கி வந்த நிலையில் அதை ரூ.2 கோடி வரை உயர்த்தப்பட்டுள்ளது.
    9. புதுச்சேரி காவல் துறையில் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு தொடங்கப்படும்.
    10. காரைக்காலில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து இந்த ஆண்டு தொடங்கப்படும். சென்னை - புதுச்சேரி இடையே பயணிகள் கப்பல் சேவை இந்த ஆண்டில் தொடங்க தனியார் பங்களிப்பு கோரப்பட்டுள்ளது.
    11. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும். உயர்நிலை வகுப்பில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் பணிகள் மீண்டும் தொடங்கப்படும்.
    12. எந்த விதமான அரசு உதவி தொகையும் பெறாத 21 வயது முதல் 57 வயது வரை இருக்கும் வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ள ஒவ்வோர் குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் இரா.சிவா மற்றும் திமுக, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து நாளை முதல் பட்ஜெட் மற்றும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். வரும் 30ஆம் தேதிவரை இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال