No results found

    1 நாள் ஆகமம்

    அதிகாரம் 1

    1 ஆதாம், சேத், ஏனோஸ்@

    2 காயினான், மலலெயேல், யாரேத்@

    3 ஏனோக், மத்துசலா, லாமேக்@

    4 நோவா, சேம், காம், யாப்பேத்.

    5 யாப்பேத்தின் புதல்வர்கள்: கோமேர், மாகோக், மாதாய், யாவான், துபால், மொசோக், தீராஸ் ஆகியோராவர்.

    6 கோமேரின் புதல்வர்கள்: அசெனெஸ், ரிப்பாத், தொகோர்மா ஆகியோராவர்.

    7 யாவானின் புதல்வர்கள்: எலிசா, தார்சீஸ், சேத்திம், தொதானிம் ஆகியோராவர்.

    8 காமுடைய புதல்வர்கள்: கூஸ், மெசுராயிம், புத், கானான் ஆகியோராவர்.

    9 கூசுவினுடைய புதல்வர்கள்: சாபா, எவிலா, சபதா, ரெக்மா, சபதகா ஆகியோராவர். ரெக்மாவின் புதல்வர்களுக்கு, சாபா, தாதான் என்று பெயர்.

    10 கூஸ் நெம்ரோதையும் பெற்றார். இவர் பூமியிலே ஆற்றலில் சிறந்து விளங்கினார்.

    11 மெசுராயிமின் சந்ததியில் லூதிம், அனாமிம், லாவாபிம், நெப்துயிம், பெத்ரூசிம்,

    12 கஸ்லுயிம் (இவர்களிடமிருந்தே பிலிஸ்தியர் தோன்றினர்), கப்தோரிம் ஆகியோர் தோன்றினர்.

    13 கானான் என்பவர் தலைமகனாய் சிதோனையும், பின்பு ஏத்தையும் பெற்றார்.

    14 மேலும், யெபுசெயரும், அமோறையரும், கெர்சேயரும்

    15 ஏவையரும் அராசேயரும், சீனாயரும், அரதியரும்,

    16 சமாரியரும், அமத்தையரும் அவருடைய வழித்தோன்றல்களே.

    17 சேமின் சந்ததியில் எலாம், அஸ்சூர், அற்பக்சாத், நூத், ஆராம், ஊஸ், ஊல், கெதேர், மொசோக் ஆகியோர் பிறந்தனர்.

    18 அற்பக்சாத் சாலேயைப் பெற்றார்@ சாலே எபேரைப் பெற்றார்.

    19 எபேருக்கு இரு புதல்வர்கள் பிறந்தனர். ஒருவர் பாலேக் என்று அழைக்கப்பட்டார் (ஏனெனில், இவரது காலத்தில் தான் நாடு பகுக்கப்பட்டது)@

    20 அவர் சகோதரரின் பெயர் யெக்தான். இவர் எல்மோதாத், சாலேப், ஆசர்மோத், யாரே ஆகியோருக்குத் தந்தை ஆனார்.

    21 மேலும், அதோராம், ஊசால், தெக்ளா,

    22 ஏபால், அபிமாயேல், சாபா, ஒப்பீர், ஏவிலா,

    23 யோபாப் ஆகியோர் அனைவரும் யெக்தான் வழி வந்தவர்கள்.

    24 சேமின் குலத்தில் அற்பக்சாத், சாலே,

    25 எபேர், பாலேக்,

    26 ராகாவு, சேருக், நாக்கோர், தாரே,

    27 ஆபிரகாம் எனப்பட்ட ஆபிராம் ஆகியோர் தோன்றினர்.

    28 ஆபிரகாம், ஈசாக், இஸ்மாயேல் என்ற இரு புதல்வரைப் பெற்றார்.

    29 இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மாயேலின் மூத்த மகன் பெயர் நபயோத்@ அவருக்குப் பின் கேதார், அத்பியேல்,

    30 மப்சாம், மஸ்மா, தூமா, மஸ்சா, ஆதாத், தேமா,

    31 யெதூர், நாபீஸ், கெத்மா ஆகியோர் பிறந்தனர்.

    32 சமிரான், யெக்சான், மதான், மதியான், யெஸ்பொக், சூயே ஆகியோர் ஆபிரகாமுக்கு அவர் வைப்பாட்டி கெத்தூராளிடம் பிறந்தனர். யெக்சானின் புதல்வர் சாபா, தாதான் ஆகியோராவர். தாதானின் புதல்வர் அஸ்சூரிம், லத்தூசிம், லவோமிம், ஆகியோராவர்@

    33 மதியானின் புதல்வர் ஏப்பா, ஏப்பேர், ஏனோக், அபிதா, எல்தா ஆகியோராவர். இவர்கள் எல்லாரும் கெத்தூராளுக்குப் பிறந்தவர்கள்.

    34 ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றார். ஈசாக்கு எசாயுவையும் இஸ்ராயேலையும் பெற்றார்.

    35 எசாயுவுக்கு எலீப்பாஸ், ரகுயேல், ஏகூஸ், இகலோம், கோரே ஆகியோர் பிறந்தனர்.

    36 எலீப்பாசின் புதல்வர்: தேமான், ஓமார், செப்பி, காதான், கேனேஸ், தம்னா, அமலேக் என்பவர்கள்.

    37 ரகுயேலுடைய புதல்வர்: நகாத், சாரா, சம்மா, மேசா என்பவர்கள்.

    38 செயீருக்கு லோத்தான், சோபால், செபெயோன், அனா, திசோன், எசேர், திசான் ஆகியோர் பிறந்தனர்.

    39 லோத்தான் ஓரியையும் ஒமாமையும் பெற்றார். லோத்தானுடைய சகோதரியின் பெயர் தம்னா.

    40 அலியான், மனகாத், ஏபால், செப்பி, ஓனாம் ஆகியோருக்குச் சோபால் தந்தையானார். செபயோனின் புதல்வர் அயியா, அனா என்று அழைக்கப்பட்டனர். அனாவின் மகன் பெயர் திசோன்.

    41 திசோனின் புதல்வர்: அம்ராம், எசெபான், யெதிரான், காரான் என்பவர்கள்.

    42 எசேரின் புதல்வர்: பலான், சாவன், யக்கான் என்பவர்கள். திசானுக்கு ஊஸ், அரான் என்ற புதல்வர் பிறந்தனர்.

    43 இஸ்ராயேல் புதல்வரை ஆள அரசர் தோன்று முன்பு, ஏதோம் நாட்டை ஆண்டுவந்த மன்னர்கள் வருமாறு: பெயோரின் மகன் பாலே தெனபாவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்தார்.

    44 பாலே இறந்த பின் பொஸ்ரா என்ற ஊரைச் சார்ந்த ஜாரேயின் மகன் யோபாப் அரியணை ஏறினார்.

    45 யோபாப் இறந்த பின் தெமானியரின் நாட்டில் பிறந்த உசாம் அரசரானார்.

    46 உசாம் இறந்த பின்பு பதாதின் மகன் ஆதாத் அரியணை ஏறினார். இவர் மோவாப் நாட்டிலே மதியானியரை முறியடித்தார். இவரது தலை நகரின் பெயர் ஆவித்.

    47 ஆதாத் உயிர் நீத்த பின் மஸ்ரெக்காவைச் சார்ந்த செம்லா அரசரானார்.

    48 செமலா மாண்டபிறகு ஆற்றோரத்தில் அமைந்திருக்கும் ரொகொபோத்தில் வாழ்ந்து வந்த சவுல் ஆட்சி செலுத்தினார்.

    49 சவுல் மரித்த பின் அக்கோபோரின் மகன் பலனான் அரியணை ஏறினார். பலனானும் மாண்டார்.

    50 இவருக்குப் பின் ஆதாத் ஆட்சி பீடத்தில் அமர்ந்தார். இவரது தலைநகரின் பெயர் பாவு. இவருடைய மனைவி பெயர் மெக்தாபேல். இவள் மெசாப் என்பவளின் மகள், மாத்தேத்தின் புதல்வி.

    51 ஆதாத் இறந்தபின், அரசர்களுக்குப் பதிலாக ஏதோமில் மக்கள் தலைவர்கள் தோன்றினர்.

    52 தம்னா, அல்வா, எத்தேத், ஒலிபாமா, ஏலா

    53 பினோன், கேனேஸ், தேமான், மப்சார்,

    54 மத்தியேல், ஈராம் ஆகியோரே அத்தலைவர்கள்.

    Previous Next

    نموذج الاتصال